ஆசியா ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதார நெடுஞ்சாலை துவக்க விழா: அமெரிக்கா பங்கேற்காது




பெய்ஜிங்: ஆசியா ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சீனாவின் பொருளாதார நெடுஞ்சாலை துவக்க விழாவில் அமெரிக்கா பங்கேற்காது என்று அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. 60 நாடுகளை இணைக்கும் ஒன் பெல்ட் ஒன் ரோடு எனப்படும் பொருளாதார நெடுஞ்சாலையை சீனா அமைத்துள்ளது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதே இந்தியாவின் புகார். சீனா பாகிஸ்தானை இணைக்கும் பொருளாதார நெடுஞ்சாலை இந்தியா சொந்தம் கொண்டாடும் பல்திஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள இந்தியா பல்திஸ்தான் இடையே சர்சைக்குரிய இடம் வழியாக பொருளாதார நெடுஞ்சாலை அமைக்க சீனா திட்டமிட்டிருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று இந்தியா தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒன் பெல்ட் ஒன் ரோடு துவக்க விழாவில் இந்தியா பங்கேற்காது என்று முடிவுவெடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளது. ஆனால் சீனாவுடன் கருத்து வேறுபாடு உள்ள வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிகளும் கலந்து கொள்ள உள்ளன. வல்லரசு நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் அமெரிக்கா புறக்கணித்துள்ளது. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url