சுந்தர் சி.-யின் பிரம்மாண்ட படத்தில் விலகி்னார் ஸ்ருதிஹாசன்
சுந்தர்.சி இயக்கத்தில் மிக பிரம்மாண்ட முறையில் உருவாக உள்ள படம் சங்கமித்ரா. இதில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்தனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ராவின் அறிமுகம் நடந்தது. இந்த விழாவில் சுந்தர் சி., ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் முரளி ராமசாமி, கலை இயக்குனர் சாபு சிரில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக தெரிகிறது. எதற்காக ஸ்ருதி விலகினார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.