Type Here to Get Search Results !

பிரியங்கா சோப்ராவின் பேவாட்ச் படத்திற்கு ஏ சான்றிதழ்




பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட் கனவுக்கன்னி பிரியங்கா சோப்ரா, பேவாட்ச் என்ற ஹாலிவுட்டில் படத்தில் நடித்தார். இந்த படம் மே 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோஷனுக்காக பிரியங்கா அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் பிரியங்கா சோப்ரா மியாமி பீச்சுக்கு சென்று அவ்வப்போது பிகினி உடையில் ஆனந்த குளியல் போட்டு வருகிறார்.

இந்த படத்தை இந்தியாவிலும் பிரியங்கா சோப்ராவை முன்வைத்து டப் செய்து வெளியிட திட்டமிட்டனர். இதனையடுத்து படத்தை சென்சார் குழுவிற்கு அனுப்பினர். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படத்தில் அதிக பிகினி காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் இடம் பெற்றுள்ளதால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad