மாட்டுகறி சூப் நடிகைக்கு ‘ஆப்பு’

மின்சார கனவு படத்தில் நடித்த


கஜோல் 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் தனுஷுடன் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் எருமை மாட்டு கறி சூப் தயாரிப்பது எப்படி என்பதுபற்றி சமையல் வல்லுனர் அளித்த விளக்க வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டார் கஜோல். இது சர்ச்சையானது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே மாட்டு கறிக்கு தடை உள்ளது. இந்நிலையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்ட கஜோலுக்கு இணையதளத்தில் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கஜோல் மத்திய அரசின் பிரசார் பாரதி போர்டு உறுப்பினராக உள்ளார். தற்போது அந்த பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மூன்று முறைக்கு மேல் தகவல் தெரிவிக்காமல் பிரசார் பாரதி கூட்டத்தில் கஜோல் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இது அமைப்பு விதிமுறைப்படி தவறு. எனவே கஜோல் பதவியை பறிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

மாட்டுக்கறி சூப் வீடியோவின் விளைவாகவே இந்த நடவடிக்கை என்று திரையுலகினர் முணுமுணுக்கின்றனர். இதுகுறித்து கஜோல் செய்தி தொடர்பாளர் கூறும்போது,’குடும்ப நிகழ்வுகள், மருத்துவ காரணங்கள் மற்றும் முன்பே தரப்பட்டிருந்த கால்ஷீட் விவகாரங்களால் கஜோல் அந்த கூட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url