அனுஷ்கா கால்ஷீட் தராததால் புதுபடம் நிறுத்தி வைப்பு





அசின் தொடங்கி எமி ஜாக்ஸன்வரை தென்னிந்திய ஹீரோயின்கள் பலர் இந்தி படங்களில் நடிக்கச் சென்றனர். ஒர்க் அவுட் ஆகாத நிலையில் பலர் மீண்டும் தென்னிந்திய படங்களுக்கே திரும்பினர். அனுஷ்கா, நயன்தாராவுக்கு பாலிவுட்டிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்காமல் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக பாகுபலி படத்துக்கு பிறகு அனுஷ்காவுக்கு இந்தி பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. இயக்குனர் இ.நிவாஸ் தான் இயக்கவுள்ள ‘ஜூவனைல்’ படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டார்.

கதை கேட்டு பிடித்திருக்கு என்று சொன்னவர் இன்னமும் கால்ஷீட் ஒதுக்கவில்லை. இதனால் படத்தையே தொடங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் இயக்குனர். இதுபற்றி அவர் கூறும்போது,’அனுஷ்கா தற்போது இந்திய அளவில் பிரபல நடிகையாகியிருக்கிறார். அவருடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கும். அவரது கால்ஷீட் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்குவேன்’ என்றார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url