சூர்யா கதையில் சசிகுமார் !
நடிகர் சூர்யாவுக்காக இயக்குனர் முத்தையா உருவாக்கிய கதை ’கொடிவீரன்’. சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து அந்தக் கதையில் சசிகுமார் நடிக்கிறார். அவர் ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். மற்றும் சனுஷா, பால சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
சசிகுமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், ஒளிப்பதிவு செய்கிறார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு மதுரை அருகே நேற்றுத் தொடங்கியது. அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
அண்ணன் - தங்கை சென்டிமென்ட்டை வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முத்தையா இயக்கிய, குட்டிப்புலி, கொம்பன், மருது ஸ்டைலில் இந்தப் படமும் இருக்கும் எனத் தெரிகிறது.