18 வருட காதல் முறிந்தது: தைய தைய நடிகைக்கு விவாகரத்து



நடிகை மலைகா அரோராவுக்கு மும்பை குடும்ப நல நீதிமன்றம் இன்று விவாகரத்து வழங்கியது.

இந்தி நடிகை மலைகா அரோரா. மணிரத்னம் இயக்கிய ’உயிரே’ படத்தில், ’தக தைய தைய தையா தையா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடுவாரே அவரேதான் இவர். இந்தியில் பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள இவர், சில படங்களில் நடித்துள்ளார். சல்மானின் சகோதரரும் நடிகருமான அர்பாஸ்கானை காதலித்து 1998-ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் உள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தார் மலைகா. இதையடுத்து அர்பாஸுக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் விவாகரத்து கேட்டு மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். செட்டில்மென்டாக தனக்கு ரூ.10 கோடி வேண்டும் என்று மலைகா கேட்டிருந்தார். இதை செட்டில் செய்வதாக அர்பாஸ் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மும்பையில் நேற்று நடந்த ஜஸ்டின் பைபர் இசை நிகழ்ச்சியில் இருவரும் மகனுடம் ஒன்றாக கலந்துகொண்டனர். இன்று அவர்களுக்கு குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. இதையடுத்து 18 வருட காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url