ஹரி, விக்ரமின் சாமி 2ம்பாகம் திரிஷாவுடன் இணைகிறார் கீர்த்தி சுரேஷ்
விக்ரம், திரிஷா நடிக்க ஹரி இயக்கத்தில் உருவான ‘சாமி’ திரைப்படம் கடந்த 2003ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. அதன்பிறகு இந்த கூட்டணி வெவ்வேறு படங்களில் பணியாற்றியது. 14 வருடத்துக்கு பிறகு இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகிறது. இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப ஸ்கிரிப்ட்டை மாற்றி அமைத்திருக்கும் ஹரி இதில் நடிக்கும் நடிகர், நடிகை மற்றும் இசை அமைப்பாளரிலும் மாற்றம் செய்திருக்கிறார். முதல்பாகத்தில் ஜோடியாக நடித்த விக்ரம், திரிஷா இரண்டாம் பாகத்திலும் இணைகின்றனர். கூடுதலாக மற்றொரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
சாமி முதல் பாகத்துக்கு இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது மாற்றப்பட்டிருக்கிறார். ஹரி இயக்கிய சிங்கம் முதல் மற்றும் 2ம் பாகத்துக்கு இசை அமைத்த தேவி ஸ்ரீபிரசாத், சாமி 2ம் பாகத்துக்கு இசை அமைக்கிறார். மற்ற நட்சத்திர மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விஜய், ஸ்ருதி ஹாசன் நடித்த புலி, விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் படத்தை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. வரும் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.