Type Here to Get Search Results !

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் வழக்கு - தமிழக அரசு புதிய விதிகள் தாக்கல்!

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் தொடர்பான வழக்கில், தமிழக அரசு சார்பில் புதிய விதிகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.






'விவசாய நிலங்கள், அங்கீகரிக்கபடாத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விற்கப்படுகின்றன' என்று, யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், 'விளை நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்யும்போது, அவற்றைப் பத்திரப்பதிவு செய்யத் தடைவிதித்து' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அந்த உத்தரவு தளர்வு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு  அரசாணைகள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த அரசாணையில், பத்திரப்பதிவு குறித்து புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:

* ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டுமனைகள் அமைப்பதற்குத் தடை

* தொடர்ந்து வேளாண்மை செய்வதற்குத் தகுதியான நிலங்களில் வீட்டுமனைகள் அமைக்கத் தடை

*  கோயில்கள், வஃபு வாரிய நிலங்களில் வீட்டுமனைகள் அமைப்பதற்குத் தடை

* உரிமம் இல்லாத காலிமனைப் பகுதியில் வீட்டுமனைகள் அமைக்கத் தடை

* பயன்பாட்டில் இல்லாத விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற, வேளாண் இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad