சமூக வலைதளம் மூலம் ரூ.25 லட்சம் நிதி திரட்டி ஏரியை தூர்வாரும் இளைஞர்கள்

சென்னை: சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் பீர்க்கன்காரணை ஏரியை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், இரும்புலியூர், நெடுங்குன்றம், முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக பீர்க்கன்காரணை ஏரி இருந்தது.


ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாராமபடாமலும், குப்பை கழிவுகள் நிரம்பியுள்ள பீர்க்கன்காரணை ஏரி சீரழிந்துள்ளது. இந்நிலையில் சமூக வளைத்தனர் மூலம் ஒன்றிணைந்த 250 இளைஞர்கள் தங்கள் முயற்சியால் 25 லட்சம் ரூபாய் திரட்டி பீர்க்கன்காரணை ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூர்வாரும் பணியை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்து கலக்கும் கழிவுநீரை தடுக்கவும், குப்பைக்கிடங்கில் இருந்து கலக்கும் கழிவு நீரை தடுப்பதை தங்களது அடுத்தகட்ட பணிகளாக இளைஞர்கள் வைத்துள்ளனர். மேலும் ஏரிக்கரையை பலப்படுத்துதல், பூங்கா அமைத்தல், குடிநீர் ஆதாரத்தை பெருக்குதல் மீண்டும் கழிவு நீர் கலக்காமல் பார்ப்பது தான் எங்களது நோக்கம் என இளைஞர்கள் கூறியுள்ளனர். சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்குக்கு உபயோகிக்காமல் சமூக நலனுக்காக பயன்படுத்திய இந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url