”மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை” நடிகை கஸ்தூரியின் சர்ச்சை டுவிட்



முத்த போராட்டத்திற்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம், மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை என நடிகை கஸ்தூரி டுவிட் பதிவிட்டு உள்ளார்.

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசின் உத்தரவை கண்டித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ் ராஜகோபாலன் நேற்று பிற்பகல் வளாகத்திலேயே கடுமையாக தாக்கப்பட்டார். பீகாரை சேர்ந்த மணீஷ் என்ற மாணவனே தாக்கியதாகவும், மணீஷ் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டில், மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் தவறானது, அது மற்றவர்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் இருந்ததால் தான் அந்த மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்ததை நான் எதிர்க்கிறேன், ஆனால் என்னுடைய உணவு முறை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருக்க கூடாது. மாட்டிறைச்சியை சாப்பிட்டால் நீங்கள் ஹீரோ இல்லை.

முத்த போராட்டத்திற்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம், ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்திருக்கலாம்.

1/3 Organising a #Beeffest was a bad idea, designed to offend people and fuel reactions. Now he got it. #iitmadras

— kasturi shankar (@KasthuriShankar) 30 May 2017
2/3 I oppose cattle slaughter ban. But my food habits should not be inconsiderate to others around me. U r not a hero if you eat steak.

— kasturi shankar (@KasthuriShankar) 30 May 2017
3/3 how different was the #beeffest to the kissing protest ? cheap stunt, cud've been ignored. violence not befitting educated #iitmadras

— kasturi shankar (@KasthuriShankar) 30 May 2017
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url