மே 18-ம் தேதி வெளியாகிறது விவேகம் டீசர்




அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர் மே 18-ம் தேதி வெளியாக உள்ளது என்று படத்தின் இயக்குனர் சிவா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

அஜித் பிறந்த நாளில் டீசர் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் முதலில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அப்போது எதிர்பார்த்த படி டீசர் வெளியாகவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் விவேகம் படத்தின் டீசர் மே 18-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url