wwe அண்டர்டேக்கர் ஓய்வு அதிகாரபூர்வ அறிவிப்பு
பிரபல WWE மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் மல்யுத்த போட்டிகளிலிருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் ரசித்து பார்க்கப்படும் விளையாட்டாக WWE உள்ளது. அதில் முன்னணி வீரராக விளங்கி வரும் அண்டர்டேக்கருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கடந்த 27 வருடங்களாக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்த அண்டர்டேக்கர் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கடைசியாக நடந்த போட்டியில் அண்டர்டேக்கர் பிரபல வீரர் Roman Reignsயிடம் தோல்வியடைந்தார். கடைசியாக அவர் போட்டி நடக்கும் அரங்கில் தன்னுடைய கையுறை, தொப்பி ஆகியவைகளை வைத்து தன் ரசிகர்களிடம் பிரியா விடை பெற்று சென்றார். அண்டர்டேக்கருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை விரைவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.