அனுஷ்காவின் அதிர வைக்கும் உண்மைகள்
அனுஷ்கா என்ற பெயருக்கு திறமை தான் பொருளோ என வியக்கும் அளவிற்கு இந்தியாவில் அனுஷ்கா ஷர்மா, அனுஷ்கா ஷெட்டி இருவரும் நடிப்பில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அனுஷ்கா ஷெட்டி, தென்னிந்திய சினிமாவில் ஹீரோ இல்லாமலேயே படம் வெற்றிப்பெறும் என்பதை நிரூபித்தவர்
இதோ! அனுஷ்கா ஷர்மா பற்றிய சில சுவாரஷ்யமான விஷயங்கள்...
நடிகை அனுஷ்கா மங்களூர் பகுதியை சேர்ந்தவர். அனுஷ்கா பாரம்பரிய துளுவ மரபு குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். பிரபுல்லா, விட்டால் ஷெட்டி இவரது பெற்றோர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். அனுஷ்கா தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரூவில் முடித்தார். ஆரம்பத்தில் இவர் யோகா ஆசிரியராக தான் பனி செய்து வந்தார். இது பலரும் அறிந்த ஒன்றாகும். பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் அனுஷ்கா. திரில் ரைடு செல்ல அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது சென்றுவிடுவாராம். நடிப்பில் ஆர்வம் இல்லாத அனுஷ்காவுக்கு. ஆடிஷன் செல்வதற்கு கூட விருப்பம் இருக்கவில்லை. வலுக்கட்டாயமாக ஆடிஷன் அழைத்து செல்லப்பட்டு, நாகார்ஜுனாவின் சூப்பர் படத்தில் நடிகையானார். நடிகர்கள் அல்லாமல் தனித்து திறமை காட்ட முடியும் என நீண்ட காலத்திற்கு பிறகு நிரூபித்தவர் அனுஷ்கா. அருந்ததியில் நெருப்பாக திறமை காட்டியவர். அடுத்ததாக ருத்ரமாதேவியிலும் நடிகர்களுக்கு இணையான அதிக பட்ஜெட் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஐந்து கோடி சம்பளம் வாங்கி தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயர்பெற்றார். நடிகர்களுக்கு மட்டுமே கோடிகளில் செலவு செய்வது இந்திய சினிமாவின் வழக்கம். ஆனால், முதல் முறையாக பாகுபலி படத்திற்காக இருபது கோடி ரூபாய் அனுஷ்காவிற்கு செலவு செய்தார் ராஜமவுளி. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடை அதிகரித்த அனுஷ்கா ஷெட்டியால் உடல் எடையை என்ன பயிற்சி செய்யும், டயட் இருந்தும் குறைக்க முடியவில்லை. இதனால், ஸ்லிம்மாக அனுஷ்காவை காண்பிக்க ராஜமவுளி ரூபாய் இருபது கோடி செலவழித்து தொழில்நுட்பத்தின் உதவியோடு கையாண்டுள்ளார்.