தனுஷ் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு
தனுஷ் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அதைவிட அவரை சுற்றி சர்ச்சைகள் நிறைந்து இருக்கின்றது என கூறலாம். இந்நிலையில் தனுஷ் எங்களுடைய மகன் என்று ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்து, பின் அந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்ததாக கூறப்பட்டது. தற்போது அந்த தம்பதி மேலும் ஒரு புகார் கொடுத்துள்ளது, நீதிமன்றத்தில் தனுஷ் தாக்கல் செய்த மனுவின் நகலை தருமாறு கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் அந்த மனுவில் தனுஷின் கையெழுத்து போலியாக உள்ளது, வேறு யாரோ தான் தனுஷ் கையெழுத்தை போட்டு கொடுத்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர்