அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்க வரும் விவேகம் டீசர்







சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டு வருகிறது.  இதுவரை `விவேகம்’ படத்தின் இரு மாறுபட்ட போஸ்டர்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு படக்குழு விருந்தளித்திருந்தது. முதல் போஸ்டர், அஜித் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் கோபமாக நிற்கும்படியாக இருந்தது. இரண்டாவது போஸ்டர் முற்றிலும் மாறுபட்டு, பனிப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போல இருந்ததுஇந்நிலையில், `விவேகம்’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் அஜித்தின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் ஒருபங்காக மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள், நேற்று முதல் அஜித் பிறந்தநாள் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அங்குள்ள முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்க முடிவு செய்துள்ளனர்.  மேலும் மற்றொரு ரசிகர் ஒருவர் `விவேகம்’ போஸ்டரில் அஜித் நிற்பது போன்ற பொம்மையை வடிவமைத்து அசத்தியுள்ளார். இவ்வாறாக தற்போதே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், விரைவில் டீசர் வெளியாக உள்ளதுஅஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி, அவரது ரசிகர்களுக்கு மெகா விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, `விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளதால், படத்தின் டீசரை மே 1-ல் வெளியிட படக்குழு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு அஜித் பிறந்தநாளில் டீசர் வெளியானால், அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இப்படத்தில் அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். விவேக் ஓபராய் வில்லனாகவும், அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ரம்ஜானை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url