அக்டோபரில் விஜய் படம் ரிலீஸ்
விஜய் நடிக்கும் 61வது படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை. இதில் அவர் 3 கெட்டப்புகளில் நடிக்கிறார். விஜய்யுடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன் நடிக்கின்றனர். இயக்கம்: அட்லி. சென்னையில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, வசன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
சில காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்படுகின்றன. ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது. ஆகஸ்டு மாதம் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. அக்டோபர் இறுதியில் படம் ரிலீசாகிறது.