Type Here to Get Search Results !

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான செய்திப் பதிவுகள் இதோ...

10.30 am: சென்னை எழும்பூரில் திமுகவினர் நடத்தும் போராட்டத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பங்கேற்பு..

10.25 am: சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்கெட் சாலையிலிருந்து பேரணியாக நடந்து வந்த எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10.15 am: சென்னை எழும்பூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில், திராவிட கழக தலைவர் வீரமணி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திமுக, இடதுசாரி கட்சி தலவைர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10.00 am: திருவாரூர் பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது. டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்திப் பதிவுகள்:

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி அதன் மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: முழு அடைப்பு என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி: எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை கண்டனம்

முழு அடைப்புப் போராட்டத் தால் தமிழகத்தில் பால் விநியோகம் தடைபடாது என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விரிவான செய்திக்கு: முழு அடைப்பு போராட்டத்தால் பால் விநியோகம் தடைபடாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி வழியில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து முழு அடைப்பு அறப்போராட்டத்தை நடத்திட ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு: எந்தத் தூண்டுதலுக்கும் இடங்கொடாமல் அமைதி வழியில் போராட்டம்: ஸ்டாலின் வேண்டுகோள்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள தால் கடைகள் அடைக்கப்படும் என்றும், ஆட்டோக்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம்: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம்: கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடாது என அறிவிப்பு

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு வணிகர்கள், தொழிற்சங்கத்தினர், திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரம்: முழு அடைப்புப் போராட்டம்: ஆதரவு யார்? புறக்கணிப்பு யார்?

கடைகள், பேருந்துகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள், வியாபாரிகளை மிரட்டி கடைகளை அடைக்கச் சொல்பவர் கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் முழு விவரம்: இன்று முழு அடைப்பு போராட்டம்: வன்முறையில் ஈடுபட்டால் கைது - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை

தமிழக விவசாயிகளின் கோரிக் கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகளும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள் ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங் களும், லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள் ளன. இதனால், தமிழகம் முழுவதும் இன்று அரசு பேருந்துகள் இயக்கப் படுமா? என பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. அதன் முழு விவரம்: முழு அடைப்பு போராட்ட அறிவிப்பு எதிரொலி: அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad