மைதானத்தில் தோனியின் காலில் விழுந்து வேண்டுகோள் வைத்த ரசிகர்
விஜய்ஹசாரே தொடரின் போது தோனியின் காலில் விழுந்த ரசிகர் ஒருவர் அவரிடம் ஆட்டோகிராப் வழங்கும் படி கேட்டுள்ளார். இந்திய அணிக்கான டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி , தற்போது உள்ளூரில் நடக்கும் விஜய்ஹசாரே தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஜார்கண்ட் அணியும், விதர்பா அணிகளும் மோதின. இப்போட்டியில் விதர்பா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை விரட்டிய தோனி அணி எளிதாக எட்டி பிடித்து வெற்றி பெற்றது. இதற்கிடையில் ஆட்டத்தின் 35வது ஓவரில் சவுராப் திவாரி ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அடுத்த வீரராக தோனி களத்தில் இறங்கினார். அப்போது திடீரென்று ரசிகர் ஒருவர் மைதானத்தில் இருந்த சுவற்றை தாண்டி குதித்து மைதானத்திற்கு உள்ளே வந்து தோனியிடம் ஒரு பேப்பரை காண்பித்து, ஆட்டோகிராப் போடும்படி வேண்டுகோள் வைத்துள்ளார். தோனி ஆட்டோகிராப் போடும் சமயத்தில் உணர்ச்சி தாங்கமுடியாமல் அவர் தோனியின் காலில் விழுந்தார். இதை கண்ட அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் உண்ர்ச்சிவசத்துடன் ஆரவாரம் செய்தனர்.