Type Here to Get Search Results !

கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும்: ஏன் தெரியுமா





உறங்கும்போது, ஏன் நமது கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் என தெரியுமா, தொடர்ந்து இதைப் படியுங்கள்.  இந்த உலகில் பலவித கோடீஸ்வரர்கள் அல்லது பணக்காரர்கள் இருக்கலாம். ஆனால், பணம், அந்தஸ்து அடிப்படையில் மதிப்பிடப்படும் அந்த பணக்காரர்கள் மதிப்பானவர்கள் அல்ல.  உண்மையான பணக்காரர் அல்லது செல்வந்தர் யார் தெரியுமா, இரவு படுக்கையில் படுத்த 2வது நிமிடத்திலேயே உழைப்பின் அயர்ச்சி தாங்காமல் உறங்கிவிடுகிறானே அவன்தான் உண்மையான செல்வந்தர்.  இதேபோன்று, உறங்கும்போது நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. ஏனெனில், நமது உடலின் தட்பவெப்பநிலையை சீராகப் பராமரிக்க இது அவசியமாகும்.  இதன்படி, உறங்கும்போது நமது கால்கள், போர்வையால் மூடப்படாமல், திறந்தபடி இருக்க வேண்டும். கால்களை தவிர்த்து, கழுத்துப் பகுதி வரையும் போர்வை கொண்டு உடலை மூடியபடி, நாம் உறங்க வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்றுவதால், உடலின் தட்பவெப்பநிலை சீராக அமையும்.  மேலும், இவ்வாறு கால்களை திறந்தபடி வைப்பதால், உடலின் வெப்பம் குறைந்து, உடனே உறக்கம் ஏற்படும். இதனை பல்வேறு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகின்றன.  இனிமேல், உறங்கும்போது, இழுத்து மூடியபடி உறங்குவதை தவிர்ப்போம்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad