அஜித் இயக்குனரை தூக்கிவிட்ட சமுத்திரகனி
அஜித்தின் ஆரம்பகால படங்களில் மிக முக்கியமானது முகவரி. இதில் ஜோதிகா, மணிவண்ணன், விவேக், ரகுவரன் மற்றும் பலர் நடித்து அனைவராலும் பேசப்பட்டது. மேலும் இது அஜித்துக்கே முகவர் காட்டிய படம் என்று சொல்லலாம். இப்படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. சிம்புவை வைத்து பின் தொட்டிஜெயா என்ற படத்தையும் இயக்கினார். தொடர்ந்து சில படங்களை எடுத்தவருக்கு பின் வாய்ப்பில்லாமல் போனது. தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு துரைக்கு வாய்ப்பு கொடுத்து உயர்த்தியுள்ளார் சமுத்திரகனி. அவரே நடிக்கும் இப்படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க இருக்கின்றனர்.