சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம்



சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது மேனேஜர் ஆர்.டி.ராஜா பெயரிலேயே படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் நடித்து வருகிறார்.  இந்த படத்திற்காக குடிசை வீடுகள் நிறைந்த தெரு இருப்பது போல செட் போட்டுள்ளார்களாம். இதனால் படப்பிடிப்பு தளத்தை பார்வையிடவோ, உள்ளே நுழையவோ வேறு யாருக்கும் அனுமதி இல்லையாம்.  இதற்காக தயாரிப்பாளர் ஜிம்பாய்ஸ் போல இருக்கும் அடியாட்கள் பலரை நியமித்துள்ளார்களாம். இவர்கள் படப்பிடிப்பு தளத்தில் முக்கியமானவர்களை கூட அனுமதிக்காமல் அமர்க்களம் செய்ததாக சொல்லப்படுகிறது.  மேலும் தயாரிப்பாளர் தன்னை மீறி யாரும் சிவகார்த்திகேயனை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் செட்டப் செய்திருக்கிறார் என சொல்லப்படுகிறது



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url