Type Here to Get Search Results !

ஸ்மித்தை போல் நையாண்டி செய்த இஷாந்த் சர்மாவிற்கு ஆஸ்கர் விருது




ஆஸ்திரேலிய  வீரரை போல் முக பாவனை காட்டி நையாண்டி செய்த இந்திய பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு ஆஸ்கர் விருதுக்கு வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.  இந்திய, ஆஸ்திரேலிய இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ம் தேதி  பெங்களூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இரண்டாவது நாள் போட்டியின் போது இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, களத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித் போல் முக பாவனை காட்டி நையாண்டி செய்தார்.  அதன் விளைவாக ஜடேஜா ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றினார். இஷாந்த் சர்மாவின் குறித்த முக பாவனை பதிவு செய்த நெட்சன்கள், அதை மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.  சர்மாவின் இந்த பாவனைக்கு ஒஸ்கர் வாய்ப்புள்ளதாக நெட்சன் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், பாலிவுட் நடிகர்களுக்கு போட்டியாக இஷாந்த சர்மா என்ற புதிய நடிகன் களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் இஷாந்த் சர்மாவின் முக பாவனை தற்போது இணையதளத்தில் பயங்கர டிரண்ட் ஆகியுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad