நா எங்கடா செத்தேன், ஒரு படத்தால் நடந்த குழப்பம்




மலையாள சினிமாவை மட்டுமின்றி ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஒரு செய்தி. மலையாள இயக்குனர் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் இறந்ததாக ஒரு செய்தி வந்தது.  அந்த செய்தி காட்டுதீ போல் பரவ, பின் சுரேஷ் சந்திர மேனனே தன் பேஸ்புக் பக்கத்தில் வந்து, நான் இறக்கவில்லை, தற்போது எடுத்த புகைப்படம் இது, பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினார்.  பிறகு தான் தெரிந்தது இறந்தது மலையாள இயக்குனர் தீபன் என்பவர், இவர் ப்ரித்விராஜ் நடித்த புதிய முகம் படத்தை இயக்கியவர்.  அதேபோல் தமிழில் வந்த புதிய முகத்தை இயக்கியவர் சுரேஷ் மேனன், இந்த படத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் சுரேஷ் மேனன் இறந்ததாக செய்தி மாறியது.  சுரேஷ் மேனன் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url