போல்டு ஆன பிறகு டிஆர்எஸ் கேட்ட வங்கதேச வீரர்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச நட்சத்திர வீரர் போல்டு ஆன பிறகு டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியதை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். காலி மைதானத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றிப்பெற்றது. போட்டியின் ஐந்தாவது நாளின் போது இலங்கை பந்துவீச்சாளர் குணரட்ன பந்து வீச, வங்கதேச நட்சத்திர வீரர் சவுமிய சர்க்கார் விளையாடினார். சவுமிய சர்க்கார் பந்தை தவறவிட ஸ்டம்பில் பட்டு விக்கெட்டானது. இலங்கை வீரர்கள் முறையீட நடுவர் அவுட் கொடுத்தார். போல்டு ஆன சவுமிய சர்க்கார் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தினார். இதுவரை கிரிக்கெட்டில் எந்த வீரரும் போல்டு ஆனதற்கு டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிஆர்எஸ் முறையில் அவுட் என உறுதி செய்யப்பட்டது. குறித்த விக்கெட் வீடியோவாக வெளியாக பலர் சவுமியா சர்க்காரின் செயலை கிண்டலடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.