சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பிரபல பாகிஸ்தான் வீரர் அதிரடி இடைநீக்கம்




பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரை அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது.  வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பானே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  விதிமுறைகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கின் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற தொடரின் போது இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் இடம்பெற்று விளையாடிய முகமது இர்பான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொரப்பட்டது.  வழக்கு தொடர்பான ACU முன் ஆஜரான இப்ரான், துபாயில் இடம்பெற்ற தொடரின் போது சூதாட்ட தரகர்கள் தன்னை தொடர்புக்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.  தான் பெற்றோர்கள் இறந்த வேதனையில் இருந்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளிக்கவில்லை என காரணம் கூறியுள்ளார்.  தற்போது, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இப்ரானிடம் விசாரணை நடத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url