கோஹ்லியை ஊதி தள்ளிய ஆப்கான் வீரர்






ஆப்கான்  வீரர் முகமது சஷாத்தே, கோஹ்லியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  48 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோஹ்லி மொத்தம் 1709 ரன்கள்  குவித்து சர்வதேச டி20 அளவில் அதிக ரன்கள்  குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தார்.  இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 72 ரன்கள்  குவித்த ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சஷாத், 1778 ரன்கள் குவித்து கோஹ்லியை முந்தியுள்ளார்.  58 போட்டிகளில் 1778 ரன்கள்  குவித்துள்ள சஷாத், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள்  குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.  அதிக ரன்கள்  குவித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மெக்கல்லம், இலங்கையின் தில்ஷன் மற்றும் மற்றொரு நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் ஆகியோர் வரிசை படி முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url