கோஹ்லி தவறாக குற்றம்சாட்டுகிறார்! கொந்தளித்த ஸ்டீவ் ஸ்மித்
டிஆர்எஸ் முறைக்காக ஓய்வறையில் இருந்தவர்களின் உதவியை நாடியதாக விராட் கோஹ்லி குற்றம்சாட்டுவது தவறானது என ஆஸ்திரேலிய அணித்தவைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். பெங்களூர் டெஸ்ட் போட்டியின்போது டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்துவதற்கு பெவிலியனில் இருந்த சக வீரர்களின் உதவியை ஸ்மித் நாடியதற்கு விராட் கோஹ்லி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஸ்மித் கூறியதாவது,என்னுடைய பார்வையிலிருந்து பார்த்தால் அது முற்றிலும் தவறானது. நான் தவறு செய்துவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நாங்கள் தொடர்ந்து தவறு செய்ததாக விராட் கோஹ்லி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தவறாக கூறியுள்ளார் என நான் நினைக்கிறேன். இந்த டெஸ்டைப் பொறுத்தவரை நாங்கள் பாதிவழி கடந்து விட்டோம். இந்த டெஸ்ட் குறித்து நாங்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் என கூறியுள்ளார்.