இந்த பாவங்களை செய்தவர்கள் சிவனுடைய கோபப் பார்வையிலிருந்து தப்பிக்கவே முடியாதாம்
சிவபுராணத்தின் படி சிவனுடைய கோபத்திற்கு ஆளாகும் பாவச் செயல்கள் இதோ!
சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவச்செயல்கள் என்ன?
அடுத்தவர்களின் மனைவி அல்லது கணவன் மீது ஆசைப்படுவது ஒரு பெரிய பாவமாகும்.
அடுத்தவர்களின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.
ஒருவன் சிறிதளவு கூட நன்மைகள் செய்யாமல், தொடர்ச்சியாக தீய வழியிலே செல்ல முற்படுவது சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவமாகும்.
கர்ப்பிணி பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் ஒரு மிகப் பெரிய பாவமாகும்.
தன்னுடன் இருக்கும் மற்றவர்களை பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைத்து சிக்கலில் மாட்டிவிடுவது சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
வதந்திகள், தேவையில்லாத விஷயங்கள், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகள் ஆகியவற்றை அனைவரிடமும் பரப்புவது மோசமான பாவமாகும்.
அடுத்தவரை கொலை செய்து அவர்களை அழிப்பது தன்னுடைய செயலால் மற்றாவர்களின் வாழ்க்கையை சீர்குலையச் செய்வது பெரிய பாவமாகும்.
இந்து சமயம் தெய்வமாக பார்க்கப்படும் மாடு போன்ற இறைச்சிகளை உணவாக சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவற்றை சாப்பிடுவதும் ஒரு பாவம்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக செய்யும் வன்முறைகள் மன்னிக்க முடியாத பாவமாகும்.
மாதா, பிதா, குரு மற்றும் வயதான பெரியவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்கள் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.