தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா
தமிழ் சினிமாவில் கால் பதித்து விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதேசமயம் தெலுங்கிலும் கீர்த்தி அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தன்னுடைய மகன் சாய் ஸ்ரீநிவாஸ் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷை நாயகியாக நடிக்க வைக்க ரூ. 1 கோடி சம்பளம் தர முடிவு செய்துள்ளாராம். ஏனெனில் கீர்த்தி சுரேஷை தனது மகனுக்கு ஜோடியாக்கி பார்க்க விரும்புவதே சுரேஷ் தானாம். கீர்த்தி, ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்குகிறது. தனது மகனுக்கு பெரிய பெரிய நடிகைகளை ஜோடியாக்குவதில் குறியாக உள்ளார் சுரேஷ்