வங்கதேச அணியில் இருந்து வீரர் அதிரடி நீக்கம் இதுதான் காரணமா
இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் வங்கதேச அணி ஆல்ரவுண்டர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கை- வங்கதேச அணிக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 15 ஆம் தேதி கொழும்பில் ஆரம்பமாகிற நிலையில், அந்த அணியில் மஹ்மதுல்லா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அணியின் முகாமையாளர் காலிட் மஹ்முட் உறுதிப்படுத்தியுள்ளார். முதலாவது போட்டியில் விளையாடிய இவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் வெறும் எட்டு ஓட்டங்களையே பெற்றுக்கொண்டதுடன் பந்துவீச்சிலும் சாதிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது