2019 உலக கோப்பையில் தோனி விளையாடமாட்டார்
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலக கோப்பையில் பங்கேற்று விளையாடுவது குறித்த இந்திய பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். 2019 உலக கோப்பை பற்றி கேள்வி எழுப்பிய போது பதிலளித்த 37 வயதான நெஹ்ரா கூறியதாவது, 2019 மிக தொலைவில் உள்ளது, என் வயது காரணமாக அதுவரை என்னால் விளையாட முடியாது. என்னை விட இரண்டு வயது இளையவராக இருந்தாலும் தோனியும் இதே முடிவை தான் எடுப்பார் என நான் நினைக்கிறேன். தோனியின் கிரிக்கெட் உடற்பயிற்சி அற்புதமாக உள்ளது. நானும், தோனியும் மாறுபட்ட வயதுக்குழுக்களை சேர்ந்தவர்கள். எங்கள் அனுபவம் மூலம் அணியில் ஒரு அமைதி உணர்வை கொண்டு வருவதே எங்களுடைய கடமை என தெரிவித்துள்ளார்.