Type Here to Get Search Results !

டொனல்ட் டிரம்பின் அதிரடி உத்தரவால் பிரச்சனையில் உள்ள கமல், விஜய்





அமெரிக்க அதிபரான டொனல்ட் டிரம்ப் குடியேற்றம் தொடர்பான திடீரென்று ஒரு உத்தரவை பிறபித்துள்ளார்.  இந்த உத்தரவால் அயல்நாட்டு மக்கள் அனைவரும் கதிகலங்கி போன நிலையில், இது தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை.  தற்போது, விஜய்61 படத்துக்காக அட்லியுடன் இரண்டாவது முறையாகக் கைகோர்த்துள்ள விஜய் படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.  ஆனால், ட்ரம்ப்பின் அறிவிப்புக்குப் பின்னர் அந்த திட்டத்தை மாற்றி இங்கிலாந்துக்கு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதேபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவிலேயே படமாக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.  இந்த திட்டத்தை மாற்றுவது குறித்து படக்குழுவினர் இன்னும் முடிவெடுக்கவில்லை. கமல் நடிப்பில் உருவாகிவரும் சபாஷ் நாயுடு படத்தில் முதல் ஷெட்யூலை அமெரிக்காவில் முடித்துள்ள படக்குழு, இரண்டாவது ஷெட்யூலுக்கு அமெரிக்காவுக்கு செல்லுமா என்பதும் கேள்விக்குறிதான்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad