Type Here to Get Search Results !

மீண்டும் திருமணம் செய்து கொண்ட டேவிட் பெக்காம்







பிரபல கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் தமது மனைவி விக்டோரியா பெக்காமுடனான திருமணபந்தத்தை மீண்டும் புதுப்பித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.  வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெக்காம், கடந்த 1999 ஆம் ஆண்டு மிகுந்த ஆடம்பரத்துடன் நடந்த திருமணம், தற்போது ஒருசில குடும்ப உறுப்பினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்களுடன் நடந்துள்ளது என்றார்.  விக்டோரியாவுடனான காதலின் வெளிப்பாடுதான் இந்த திருமண பந்தம் புதுப்பித்தல் என கூறியுள்ள பெக்காம், தங்கள் வீட்டில் வெறும் 6 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவின் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது என்றார்.  விக்டோரியாவுடன் வாழ்ந்து வந்துள்ள இதுவரையான காலகட்டத்தில் பல முறை ஊடகங்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளானபோதும் தமது குழந்தைகள் 4 பேருதான்  எங்கள் திருமணம் இதுநாள் வரை நீடிக்க காரணம் என பெருமையுடன் தெரிவித்தார் பெக்காம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad