Type Here to Get Search Results !

தூக்கத்தில் அமுக்கும் பேய் பற்றி தெரியுமா உங்களுக்கு






நாம் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென நம் மீது யாரோ அமர்ந்துக் கொண்டு அமுத்துவது போல ஓர் உணர்வு தோன்றும், இதை சிலர் அமுக்குவான் பேய் என்று கூறுவார்கள்.  ஆனால் உண்மை என்னவென்றால், நாம் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, உறக்கத்தின் பல நிலைகளை கடக்கின்றோம். எனவே நாம் தூக்க நிலைகளை கடக்கும் போது, அழுத்தம் போன்ற பிரச்சனைகள் காரணமாக நமக்கு தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது.  இந்த காரணத்தினால் தான் நாம் ஆழ்ந்து தூங்கும் போது, யாரோ தூக்கத்தில் அமிழ்த்துவது போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றது. இதை தான் சிலர் அமுக்குவான் பேய் என்று கட்டுக் கதைகளை சொல்கின்றார்கள்.

தூக்க பக்கவாதம் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்

* நாம் தூங்கும் நேரத்தில், தூக்க பக்கவாதம் ஏற்படும் போது, நமது கண் விழித்தபடியும், உடல் அசையாத தன்மையையும் பெற்றிருக்கும். இதனால் தூக்கத்தில் நம்மை யாரோ கட்டி வைத்து, அசையவிடாமல் தடுப்பது போன்றும் இறந்தது போன்றும் சில உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

* நாம் உறங்குவதில், பல நிலைகளை கடப்பது இயல்பு. அந்த வகையில் ஆர்.ஈ.எம் (R.E.M) எனப்படும் ரேபிட் ஐ மூவ்மென்ட் (Rapid Eye Movement). இந்த நிலையில் தான் நமக்கு அதிக கனவுகள் தோன்றும். இந்த தூக்க நிலை மாற்றதில் தொந்தரவு அல்லது பிரச்சனைகள் உண்டாகும் போது, நமக்கு தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது.

* தூக்க பக்கவாதம் ஏற்படும் நபர்களின் கண்கள் திறந்தும், அசைய முடியாமல் இருப்பதால், அப்போது ஏற்படும் உணர்வுகள் கெட்ட கனவாக தோன்றும். இந்த நிலையை சிலர் பிரமை என்று நினைப்பார்கள். ஆனால் நமது ஊர்களில் இந்நிலையை அமுக்குவான் பேய் என்று கூறுகின்றனர்.

* தூக்க பக்கவாதம் ஏற்படும் போது, அசைய முடியாத நிலைகள் சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள் வரை நீடிக்கலாம். எனவே நாம் அதிலிருந்து வெளிவர சில நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

* தூக்க பக்கவாதம் என்பது ஓர் பெரிய உடல்நல குறைபாடு இல்லை. இது அனைவருக்கும் ஏற்படும் இயல்பான ஒரு நிகழு தான். சில சமயங்களில் நாம் அதிக நேரம் ஓயாது வேலை செய்து உறக்கமின்றி இருந்து விட்டு, பின் ஆழ்ந்து உறங்கும் போது, அந்த நிலைகளில் தொந்தரவு ஏற்பட்டால் தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது.

* தூக்கமின்மையில் இருந்து பின் ஆழ்ந்து உறங்குவதால் இந்த தூக்க பக்கவாதம் ஏற்படுகிறது. எனவே தூக்க பக்கவாதம் காரணமாக நமக்கு அதிக அச்சம் ஏற்படும். ஆனால் இதனால் உயிரிழப்புகள் போன்ற வாய்ப்புகள் ஏற்படாது


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad