Type Here to Get Search Results !

பாகிஸ்தான் அணிக்கு இந்த அசிங்கம் தேவையா




டெஸ்ட் போட்டியின் போது மோசமான டிஆர்எஸ் ரெவியூ  கேட்ட முதல் அணி எது என்று கேட்டால் அது பாகிஸ்தான் அணியாகத்தான் இருக்கும்.  ஆஸ்திரேலியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள்  எடுத்தது, அடுத்தாடிய ஆஸ்திரேலிய  அணி 6 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்கள் ள் எடுத்தது.  இதில் மூன்றாம் நாள் ஆட்டத்தை விளையாட துவங்கிய ஆஸ்திரேலிய  அணிக்கு வார்னர் மற்றும் ரென்சாவ் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.அப்போது வார்னருக்கு பந்து வீசிய முகமது அமீர் பந்து பேட்டில் பட்டு சென்றதாக அம்பயரிடம் டி.ஆர்.எஸ் ரெவியூ கேட்டார்.  ரெவியூவில்  பேட்டுக்கும் பந்துக்கும் இடையே அரை அடி பெரிய இடைவேளியில் பந்து சென்றது தெரியவந்தது. பாகிஸ்தானின் இந்த ரெவியூ  மிகவும் மோசமான ரெவியூ   கிரிக்கெட் வரலாற்றில் அமைந்துள்ளது.  இதைக் கண்ட ஆஸ்திரேலிய  வீரர் வார்னர் கண் தெரியாதா என்று செய்கை செய்வது போல் பாகிஸ்தான் வீரர்களை கண்டு ஏளனமாக சிரித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad