Type Here to Get Search Results !

ஆஸ்திரேலியா வீரரிடம் அசார் அலி வாங்கிய அடி





இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணியில் கொண்டு வரப்பட்ட 3 இளம் வீரர்களில் ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம்ப் தேற, மேடிசன் சோபிக்கவில்லை, இன்று அவர் 22 ரன்கள் எடுத்து யாசிர் ஷா பந்தை மேலேறி வந்து ஆட முயன்றார், பந்து அவரை ஏமாற்றி ஸ்டம்பைத்தாக்கியது. இவர் இதுவரை 0,1,4, 22 என்று தனது டெஸ்ட் இடத்தை இழக்கும் வாய்ப்பை தானே உருவாக்கிக் கொண்டுள்ளார், அதே போல் மேத்யூ வேட் 9 ரன்கள் எடுத்து சொஹைல் கான் வீசிய ஆடாமல் விட வேண்டிய பந்தை கட் செய்ய முயன்றார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆசாத் ஷபிக் கையில் ஸ்லிப்பில் அமர்ந்தது. இவரும் 4,7,1, தற்போது 9 என்று சோபிக்கவில்லை. இவர் ஆடும்போதுதான் ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த இரட்டைச்சத சாதனை நாயகன் அசார் அலி அடி வாங்கி பெவிலியன் அழைத்துச் செல்லப்பட்டார். வேட் ஆடிய சக்தி வாய்ந்த புல் ஷாட் அசார் அலியின் ஹெல்மெட்டை பயங்கரமாகத் தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் சோதனைக்காகவும் உடனடியாக அசார் அலி பெவிலியன் அழைத்துச் செல்லப்பட்டார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad