கவர்மெண்ட் எக்ஸாமில் ஐஸ்வர்யா தனுஷின் பெயர்
ரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்று அறியப்பட்டவர் ஐஸ்வர்யா தனுஷ். ஆனால், இன்று இவர் ஒரு இயக்குனராகவும் பலருக்கும் தெரியும். இந்நிலையில் இன்று தமிழகத்தில் Group-4க்கான அரசாங்க வேலைக்கான எக்ஸாம் நடந்தது. இதில் ‘கடந்த வருடம் பெண்கள் சம உரிமைக்காக சிறப்பு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்’ என்று கேட்டுள்ளனர். இதில் சாய்ஸாக ‘ஐஸ்வர்யா தனுஷ், ப்ரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், சானியா மிர்ஸா’ ஆகியோரின் பெயர்கள் இருந்தது. இதற்கு சரியான விடை எல்லோருக்கும் தெரிந்தது தான் ஐஸ்வர்யா தனுஷ்.