வாரம் ரூ.19 கோடி ஊதியம் பெறும் பிரபல வீரர் பெற்ற தாயாரை புறக்கணித்த கொடுமை




மான்செஸ்டர் சிட்டி அணிக்காக வாரம் ரூ.19 கோடி ஊதியம் பெற்று விளையாடும் பிரபல கால்பந்து வீரர் Nolito-வின் தயார் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் நாட்டின் முக்கிய கால்பந்து அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்ட உடன் தங்களது குடும்பத்தை உயர்ந்த நிலையில் வைத்து பார்க்கவே ஆசைப்படுவார்கள்.  ஆனால் ரோசியோ டூரான், பிரபல கால்பந்தாட்ட வீரர் மான்செஸ்டர் சிட்டி அணியின் Nolito இந்த கூற்றிற்கு நேரெதிராக செயல்பட்டு வருகிறார்.  இவரது தயார் இதுவரை மகனின் ஆடம்பர வாழ்க்கையில் ஒரு அம்சம் கூட தமக்கு அனுபவிக்க கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.  Celta Vigo தொடரில் தனது தனித்திறமையால் அசத்திய Nolito மான்செஸ்டர் சிட்டி அணி நிர்வாகிகளின் பார்வையில் பட்டு தற்போது வாரம் ஒரு லட்சம் பவுண்டு (இலங்கை மதிப்பில் ரூ.18,486,694) ஊதியத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.  Nolito-வின் தயார் கடந்த 2015 ஆம் ஆண்டு கோடப்பருவத்தில் இருந்தே தமது மகனுடன் பேச்சு வார்த்தை எதுவும் இல்லை என்றும், Nolito எந்த வித உதவியும் செய்வது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.  Nolito-வின் தயார் கடந்த 20 ஆண்டுகளாக பாலியல் தொழில் மற்றும் சிறை தண்டனை என காலத்தை ஓட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி போதை மருந்துக்கும் அடிமை. இந்த காரணங்களால் Nolito தமது தாயாரை புறக்கணித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  ஆனால் இவரது சகோதர்கள் இருவர் தாயாருடனே இருக்கின்றனர். அவர்களுக்காவது உதவலாம் என்று Nolito ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url