பெர்த் டெஸ்ட் போட்டி: தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பி ரிக்க அணி 242 ரன்களும், ஆஸ்தி ரேலிய அணி 244 ரன்களும் எடுத் தன. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப் பிரிக்க அணி 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 390 ரன்களை எடுத்திருந்தது. 4-ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணியின் வீரர்களான டி காக், பிலாண்டர் இருவரும் வேகமாக அடித்து ஆடி ரன்களைக் குவித்தனர். 7-வது விக்கெட்டுக்கு 116 ரன் களைச் சேர்த்த இந்த ஜோடியை மிட்செல் மார்ஷ் பிரித்தார். 100 பந்துகளில் 64 ரன்களைக் குவித் திருந்த டி காக், மிட்செல் மார்ஷின் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் அவுட் ஆனதைத் தொடர்ந்து கேசவ் மகராஜுடன் சேர்ந்து பிலாண்டர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 143 பந்துகளில் 73 ரன்களைச் சேர்த்த பிலாண்டர், ஸ்மித்தின் பந்தில் போல்ட் ஆனதும் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தை டிக்ளேர் செய்வ தாக அறிவித்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப் புக்கு 540 ரன்களை எடுத்திருந்தது. 2-வது இன்னிங்ஸில் 539 ரன்களைச் சேர்த்தால் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆடவந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்ஷும், வார்னரும் முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களைச் சேர்த்த நிலையில் வார்னர் ரன் அவுட் ஆனார். அவர் 33 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்திருந்தார். அவர் அவுட் ஆன அதே வேகத்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ஷின் விக்கெட்டை ரபாடா சாய்க்க 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என்று ஆஸ்திரேலியா தடுமாறியது. ஆஸ்திரேலிய அணியை இந்த இக்கட்டில் இருந்து மீட்கும் முயற்சி யில் உஸ்மான் கவாஜாவும், ஸ்மித் தும் ஈடுபட்டனர். ஓரளவு நிதானமாக ஆடிய இவர்கள் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைக் கடக்க உதவி யாக இருந்தனர். இந்த ஜோடியை ரபாடா பிரித்தார். 91 பந்துகளில் 34 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்மித், ரபாடாவின் பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு பிறகு ஆடவந்த வோக்ஸ் 1 ரன்னிலேயே ரபாடாவிடம் விக்கெட்டைப் பறிகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்று மீண்டும் தடுமாறியது. நேற்று ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களைச் சேர்த் திருந்தது. வெற்றிபெற மேலும் 370 ரன்களைச் சேர்க்கவேண்டிய நிலையில், மேலும் விக்கெட்களை இழக்காமல் ஆட்டத்தை எப்படியா வது டிரா செய்தாலே போதும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது.