யுவராஜ்- தோனி சண்டையா




இந்திய அணியின் பிரபல வீரரான யுவராஜ் சிங் தனது அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதற்காக YWC Fashion என்ற பெயரில் ஆடைகளை வடிவமைத்துள்ளார்.  ஆடை வடிவமைப்பாளர்களான நிகில் மற்றும் ஷாந்தனுடன் இணைந்து ஆடைகளை வடிவமைத்துள்ளார்.  இதை விற்றும் கிடைக்கும் பணத்தை புற்றுநோய் விழிப்புணர்வு பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.  இந்த ஆடைகளின் அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது.  இதில் பிரபலங்களான வீரேந்திர ஷேவாக், ரோஹித் சர்மா, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, முகம்மது கைப், சுஷில் குமார், ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், அர்ஜூன் ராம்பால், பர்ஹான் அக்தார், பரா கான், கிறிஸ் கெய்ல், வேயன் பிராவோ உளளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  ஆனால் மகேந்திர சிங் தோனி மட்டும் வரவில்லை, சமீபகாலமாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக கூறப்படுகிறது,  மேலும் பலரும் தோனி  பற்றி விசாரிக்கவே, நான் பலமுறை போன் செய்து பார்த்தேன், அவர் எடுக்கவில்லை, பிஸியாக இருக்கிறார் போல, எப்படியிருந்தாலும் உதவுவார் என தான் நம்புவதாக கூறினாராம்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url