கிடாரி வெற்றியினால் மீண்டும் கிராமத்தை நோக்கி சசிகுமார்
கம்பெனி புரொடக்ஷன் சார்பில் எம்.சசிகுமார் தயாரித்து, நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் கிடாரி சாத்தூர் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக அறிமுக இயக்குனர் பிரசாத் இப்படத்தை இயக்கியிருந்தார். தாரை தப்பட்டை, வெலற்றிவேல் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் கிடாரி படத்தை மிகவும் எதிர்பார்த்த சசிக்கு வெற்றி கிடைத்துவிட்டது. தன்னுடைய சம்பளம் இல்லாமல் 5 கோடி பட்ஜெட்டில் கிடாரி படத்தை தயாரித்திருந்தார். தமிழக தியேட்டரிகல் ரைட்ஸ் மட்டுமே 9 கோடிக்கு விலை போனது. சேலத்தைச் சேர்ந்த விநியோகஷ்தர் ஒருவர் வாங்கி வெளியிட்டார். தமிழகத்தில் 4 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாயை கிடாரி படம் வசூல் செய்து கொடுத்துவிட்டது. கிடாரியின் வெற்றியினால் படத்தை தயாரித்த சசிகுமார் சந்தோஷத்தில் உள்ளார். அதுமட்டுமல்ல, தனது அடுத்த படத்தையும் கிராமத்துப் படமாகவே தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் அவர். கிடாரியைத் தொடர்ந்து புதிய இயக்குனர் பிரகாஷ் என்பவரின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு தேனியில் துவங்குகிறது. கதாநாயகி மற்றும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பவர்களின் தேர்வு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது