சரக்கு இமேஜை மாற்றும் டைரக்டர்
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் ராஜேஷ்.எம். அதையடுத்து அவர் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. மேலும், அவர் இயக்கிய அனைத்து படங்களிலுமே டாஸ்மாக் காட்சிகளை அதிகமாக வைத்து வந்தார் ராஜேஷ்.எம். அதனால் அவர் மீது சரக்குப்பட இயக்குனர் என்கிற இமேஜ் ஒட்டிக்கொண்டது. ஆனால் இந்த இமேஜை தொடரவிடக்கூடாது என்று முடிவெடுத்த அவர், தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கியுள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஒரு டாஸ்மாக் காட்சிகூட வைக்கவில்லையாம். மருந்துக்குகூட சரக்கு பாட்டிலை காட்சிகளில் காட்டவில்லையாம். மேலும், ரொமான்டிக் காதல் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் லவ் பீல் மட்டுமின்றி காமெடி காட்சிகளை தூக்கலாக வைத்திருக்கிறாராம். மேலும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்