கூல் கேப்டனுக்கு கூல் பதில்





எம்.எஸ்  தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய 'M.S Dhoni - The Untold Story' என்னும் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி  திரைக்கு வருகிறது.  இந்த திரைப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தனது வாழ்க்கை படம் பற்றி தோனி  கேள்வி எழுப்புவதும், அதற்கு இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் சுஷாந்த் சிங் கூலாக பதில் சொல்வதும் போன்ற புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் கேப்டன் கூல் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக்கொண்டே, எனது வரலாற்றை கூறு என கேட்கிறார்.  அதற்கு சுஷாந்த் சிங், மன்னிக்கவும் என்னால் படத்தை பற்றி கூற முடியாது, அதற்கு நீங்கள் படம் தான் பார்க்க வேண்டும் என கூலாக பதிலளிக்கிறார்.  இருப்பினும்  தோனி மீண்டும் கேட்கவே, இந்த படத்தில் பாடல் உள்ளது, நடனம் உள்ளது என மழுப்பலாக பதிலளித்து எழுந்து நின்று ஆடிக்காட்டுகிறார் சுஷாந்த் சிங்




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url