Type Here to Get Search Results !

ரோட்டோர கடைகளில் காளான் சாப்பிடலாமா? உண்மையில் அது காளான் தானா





நம்மில் பலர் ரோட்டோர கடைகளில் பானிபூரி, மசால் பூரி, பேல் பூரி, காளான் என பல பதார்த்தங்களை ருசித்து ருசித்து சாப்பிடிருப்போம். விலை குறைவு, சுவை அதிகம் என்பதால், இது போன்ற கடைகளுக்கு தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் வரவேற்பு அதிகம்.  இந்த உணவுகளின் சுவையை பார்க்கும் நாம், இவற்றை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்கைப் பற்றி கலைப்படுவதில்லை. பெரும்பாலான கடைகளில் காளான் என்ற பெயரில் விற்கப்படும் உணவில் இருப்பது காளான் இல்லை என்பதே உண்மை  

காளான் இல்லை என்றால் வேற என்ன? என கேட்கிறீர்களா?...

முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து எடுத்ததை தான் காளான் என்கிறார்கள். இதனுடன், சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி கலவையை வேக வைத்து வாடிக்கையாளருக்கு தட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.  இதையறியாத பலரும் காளான் சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் உணவுககளை விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.  மேலும், ஒருமுறை உணவை வேகவைக்கப் பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இது போன்ற உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.  எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடிப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் விற்பனை சூடுபிடிக்கிறது


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad