Type Here to Get Search Results !

தடை செய்யப்பட வேண்டிய 5 உணவுகள், ஆனால் தினமும் உண்டு வருகிறோம்





உடலுக்கு ஆரோக்கியமானது, உடல் பருமனை குறைக்க உதவும், மிகவும் ருசியானது என சில உணவுகளை நாம் அன்றாடம் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், அவை அனைத்தும் தான் நமது ஆரோக்கியத்திற்கு உலைவைக்கும் திறன் கொண்டிருக்கின்றன. சொல்லப் போனால் இவற்றை எல்லாம் தடை செய்ய வேண்டும்.

ஆனால், நாள்பட இவை விளைவிக்கும் தீய குணங்கள் பற்றி அறியாமல் நாம், இவற்றை தினமும் உட்கொண்டு வருகிறோம். முக்கியமாக இந்த உணவுகளை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அறவே உட்கொள்ள கூடாது

 பதப்படுத்தப்பட்ட பேக்கிங் உணவுகள்:

டோனட்ஸ், முஃப்பின்ஸ், கேக், குக்கீஸ் போன்ற உணவுகள் பார்பதற்கும், ருசிப்பதற்கும் நல்ல உணவுகளாக நாம் கருதி வருகிறோம். ஆனால், இவற்றில் சேர்க்கப்படும் தேவையற்ற இனிப்பூட்டிகளின் காரணமாக உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்கின்றன. இதனால் நாள்பட உடல்பருமன், நீரிழிவு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 பதப்படுத்தப்பட்ட இறைச்சி:

இன்று சூப்பர் மார்கெட் எனப்படும் கண்ணாடி சுவர்களுக்குள் பதப்படுத்தப்பட்ட விற்கப்படும் இறைச்சியை தான் நாம் ஹைஜீனிக் என்ற பெயரில் அதிகம் உண்டு வருகிறோம். இதன், தொடர்ச்சியாக சின்ன, சின்ன கடைகளும் கூட இறைச்சியை பதப்படுத்தி விற்றுவருகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் உண்பதால், உடலில் கேன்சர் செல்கள் வேகமாக உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. கொழுப்பு மட்டுமின்றி, நைட்ரேட், நைட்ரைட் போன்ற கெமிக்கல் பொருட்களும் இதில் சேர்ந்திருப்பதால் இதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன

 டயட் சோடா:

ஏதோ காய்ச்சல், ஜலதோஷம் ஏற்படுவது போல இன்று உடல்பருமனும், நீரிழிவும் உண்டாவதற்கு காரணம் இந்த டயட் சோடா தான். சர்க்கரை அளவு அறவே இல்லை என அறைகூவல் இட்டு விற்கப்படும் இவற்றில் சர்க்கரை செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் வளர்சிதை மாற்றம், உடல் பருமன், நீரிழிவு, பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமையில் குறைபாடு ஏற்படுகின்றன

 உறைய வைத்த உணவுகள்:

உறைய வைக்கப்படும் உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்பு இருக்கிறது. இது பலவகையான ஆரோக்கிய குறைபாடு உண்டாக காரணியாக இருக்கிறது. உறைய வைக்கப்படும் கேக், குக்கீஸ்கள் நாவிற்கு ருசியானதாக இருப்பினும். அவை, ஆரோக்கியத்திற்கு ருசியானது அல்ல. இதனால் உடலில் அதிகரிக்கும் கொழுப்பு உடல் பருமன் மற்றும் இரத்த சர்க்கரை அதிகரிக்க காரணியாக அமைகிறது

 சர்க்கரை சேர்க்கப்பட்ட தானிய உணவுகள்:

சுவைக்காக இன்று பல உணவுகள் செயற்கை சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. மேலும், சீக்கிரம் கெடாமல் இருக்க பதபடுத்த உதவும் கேமிக்கல்களும் சேர்க்கின்றனர். இதனால், நல்ல ஊட்டச்சத்து இருக்கும் தானிய உணவுகளும் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொள்கின்றன.

இதில், சர்க்கரை சேர்க்கப்பட்டு, பதப்படுத்தி விற்கப்படும் தானிய உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் புற்றுநோய் உண்டாக்கும் செல்கள் உண்டாகவும், இதய நலன் சீர்கெடவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இதனால், பற்களின் வலுவிலும் தீய தாக்கம் உண்டாகிறது. நீங்கள் இன்று பயன்படுத்தும் அனைத்து முன்னணி ஓட்ஸ் மற்றும் தானிய உணவு பாக்கெட்டுகளிலும் இந்த சமாச்சாரங்கள் இருக்கிறது


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad