Type Here to Get Search Results !

முழுமையான தூக்கம் கிடைக்க..... இதோ வழிகள்




தூக்கமின்மையால் இன்று பாதிக்கப்படுபவர்கள் பலர். ஆனால், ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று எண்ணி அதற்கு உரிய கவனம் கொடுத்து அவர்கள் சரிசெய்யாததால், உடல்நலக் குறைபாடுகள் பல அவர்களுக்கு ஏற்படும் .

முழுமையான தூக்கம் கிடைக்க..! 

*  டி.வி, செல்போன் பாத்துக்கொண்டே தூங்கும் பழக்கங்களுக்குத் தடைவிதித்துக் கொள்ள வேண்டும்.

*  அடுத்தநாள் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல், அமைதியான மனநிலையில் உறக்கத்துக்குள் செல்ல வேண்டும்.

*  ‘அப்பாடா... படுத்துட்டோம்... இப்போ நல்லா நிம்மதியா தூங்குவோம்’ எனச் சொல்லி ஆனந்தமான தூக்கத்தை மனதில் கற்பனை செய்தபடி தூங்க வேண்டும்.

*  வலி, கை கால் குடைச்சல் இருந்தால் உடனே அதனைச் சரிசெய்ய வேண்டும்.

*  அளவான சாப்பாடு உட் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் (8 மணிக்குப் பிறகு) காபி, டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக... சிகரெட் கூடவே கூடாது.

*  எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.

*  தினமும் குறைந்தது 30 நிமிடம்  முறையான உடற்பயிற்சி/நடைப் பயிற்சி அவசியம்.

*  நெருக்கம், இடம் பற்றாக்குறை என இல்லாமல் நல்ல காற்றோட்டமான, விசாலமான, முக்கியமாக விருப்பமான இடத்தில் உறங்க வேண்டும். நல்ல தூக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்ட பின்னர் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

*  மறுநாள் விடுமுறை என்றால், முதல் நாள் இரவு 12 மணிவரை விழித்திருப்பது என்றில்லாமல், எப்போதுமே 6 முதல் 9 மணி நேரத் தூக்கத்தை, இரவு 9 முதல் காலை 6 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  தொலைதூரப் பயணத்தால் தூக்கம் தடைப்படும். இதை அடுத்த நாள் உடனடியாகச் சரிசெய்துகொள்ள வேண்டும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad