Type Here to Get Search Results !

சூரிக்காக அவசரகதியில் களமிறங்கிய அதர்வா



ஈட்டி, கணிதன் படங்களுக்குப்பிறகு அதர்வா கமிட்டாகி நடித்து வந்த படம் ருக்குமணி வண்டி வருது. இந்த படத்தை வானவராயன் வல்லவராயன் படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்கி வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா சவேரி நடிக்கிறார். இப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில், தனது சொந்த படமான செம போத ஆகாத படத்தில் நடிக்கத் தொடங்கிய அதர்வா, அந்த படத்தை முழுவீச்சில் நடித்து முடித்தவர், அதையடுத்து இப்போது ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், செம போதை ஆகாத படத்தில் நடித்து முடித்ததும், ருக்குமணி வண்டி வருது படத்தில்தான் நடிப்பதாக இருந்தார். ஆனால், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் அவருடன் காமெடியனாக சூரி நடிக்கிறார். அவரது கால்சீட் உடனடியாக கிடைத்ததால், இதை தவற விட்டால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதால் தற்போது அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அதர்வா. இதன்காரணமாக, ராஜமுருகன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ருக்குமணி வண்டி வருது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad