Type Here to Get Search Results !

ஆயுத பூஜைக்கு வரிசைகட்டும் படங்கள்







சுதந்திர தின விடுமுறையை அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள்  குறி வைப்பது ஆயுதபூஜை விடுமுறை நாட்களைத்தான். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என வரிசையாக 5 நாட்கள் விடுமுறை. எனவே, அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸைக் குறிவைத்து  இரண்டு மாதத்திற்கு முன்பே  ரெமோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். ரெமோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளே இன்னும் முடியவில்லை. இதற்கிடையில், அதே நாளில் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், டீகே இயக்க, ஜீவா, காஜல் அகர்வால்நடிக்கும் கவலை வேண்டாம் படமும்  அக்டோபர் 7-ஐ தங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளது. இப்போது லேட்டஸ்ட்டாக இந்தப் பட்டியலில் ஜெயரம் ரவியும் இணைந்திருக்கிறார். ரோமியோ ஜூலியட் பட இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில், ஜெயரம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் போகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. போகன் படத்தில் அர்விந்த் சாமியும் இணைந்திருக்கிறார். தனி ஒருவன் படத்திற்குப் பிறகு இப்படத்திலும் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார்.  ரெமோ படத்தைப் போலவே இந்தப் படமும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு துண்டைப்போட்டுள்ளது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad