Type Here to Get Search Results !

விமர்சனங்களை ஏற்பதுதான் என் வெற்றியின் ரகசியம் தமன்னா கூறுகிறார்





“விமர்சனங்கள்தான் எனக்கு சொந்தம். வெற்றி என்பது கூட்டு முயற்சி. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வெற்றியில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். ஒரு நடிகரையோ நடிகையையோ மட்டும் வைத்து படங்கள் ஓடுவது இல்லை. பலருடைய உழைப்பு அதில் மறைந்து இருக்கிறது. எனவே ஒரு படம் வெற்றி பெறும்போது நான் கர்வப் படமாட்டேன்.  ஆனால் என்னைப்பற்றிய விமர்சனங்களை முக்கியமாக எடுத்துக்கொள்வேன். விமர்சனங்கள் மூலம் தான் தவறுகளை சரி செய்ய முடியும். இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற உத்வேகமும் ஏற்படும். எனது வெற்றியின் ரகசியமும் இதுதான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இதற்காக கதைகள் தேர்வில் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.  எதிர்காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவேன். நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அனுபவம் இல்லாமல் இருந்தேன். அதற்கு ஏற்றார்போல்தான் கதைகளையும் தேர்ந்தெடுத்தேன். இப்போது அப்படி இல்லை. சினிமாவை பற்றி நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறேன். புதுமைகள் செய்வதற்கு இதுதான் எனக்கு சரியான நேரம் என்று தோன்றுகிறது. வரும் காலங்களில் என்னை வேறுமாதிரி கதாபாத்திரங்களில் பார்க்கலாம்.”தமன்னாவுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பாகுபலி சிறந்த படமாக அமைந்தது. இதில் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த தர்மதுரை படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. விஷால் ஜோடியாக கத்திச்சண்டை, பிரபுதேவாவுடன் தேவி படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad